Monday, April 18, 2016

படிக்கிறாய் இறைவனுக்காக......
தினமும் ஐந்தாறு மணித்தியாலம் வகுப்பறையில்

விளையாடுகிறாய் இறைவனுக்காக........
இரண்டு மணித்தியாலம் மைதானத்தில்

பதிவுகளை இடுகிறாய் இறைவனுக்காக........
தினமும் ஒரு மணித்தியாலம் சமூக வலைத்தளத்தில்

அடுத்தவர்களுக்கு உதவுகிறாய் இறைவனுக்காக........
கிழமைக்கு பல மணித்தியாயங்களை செலவளித்து

இறைவனைத் தொழ தேவை சில நிமிடங்கள்
திணறுகிறாய் முடியாமல்.....

மனிதா!!!!
உன்னை நீ ஏமாற்ற இட்ட அடைமொழி தான் ''இறைவனுக்காகவா"???

Thursday, April 14, 2016

Wednesday, November 11, 2015

எமக்கே இல்லாமல் போன எமது நேரம்

எமது வினைத்திறன் மிக்க நேரத்தை கம்பனி எனும் பெயரில் உலகை தன் பிடியில் வைத்திருக்கும் இன்னொருவனுக்கு அடகு வைத்தோம்.

ஓய்வு நேரத்தை Entertainment  எனும் பெயரில் உலகை தன் பிடியில் வைத்திருக்கும் மீடியா நிறுவனங்களுக்கு அடகு வைத்தோம்.

எமது பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை உலகை தன் பிடியில் வைத்திருப்போர் கையில் கொடுத்தோம்.